இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார் சிறீதரன்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 187 வாக்குகளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டது. புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்