இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள...

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா இதனை உறுதி செய்துள்ளார்.

இருப்பினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைந்துள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்