உலகில் நேரம் தவறாத 20 விமான நிலையங்களுள் கோவை விமான நிலையம்!

உலகில் நேரம் தவறாத 20 விமான நிலையங்களுள் கோவை விமான நிலையம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உலகளாவிய ரீதியில் நேரம் தவறாமல் இயங்கும் 20 விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப் பட்டியலை இந்த நிறுவனம் உலகளாவிய பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமான 'அபீஷியல் ஏர்...

உலகளாவிய ரீதியில் நேரம் தவறாமல் இயங்கும் 20 விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப் பட்டியலை இந்த நிறுவனம் உலகளாவிய பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமான 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியான இதன் பட்டியலின்படி , உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது.

இந்த விமான நிலையம் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ' 15 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை விமான நிலையமானது இந்தியாவின் பதினைந்தாவது மிக பெரிய விமான நிலையமாகவும். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாகவும் காணப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்