க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான...

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான பரீட்சை மீண்டும் நடைபெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளுக்குரிய பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்தது.

இந்நிலையில், விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார். இந்நிலையில் விவசாய விஞான விஞ்ஞான பரீட்சையின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 01 ஆம் திகதி , காலை 08.30 முதல் 11.40 வரை நடைபெறும் எனவும் முதல் பகுதி பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்