கல்யாண வீட்டு சுவை வீசும் Veg Biryani: வீட்டிலேயே எப்படி செய்வது?

கல்யாண வீட்டு சுவை வீசும் Veg Biryani: வீட்டிலேயே எப்படி செய்வது?

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பொருளடக்கம்கல்யாண விருந்து சுவை தரும் 20 நிமிட வெஜ் பிரியாணி- தேவையான பொருட்கள்செய்முறை தினமும் அதே மாதிரியான மதிய உணவு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? 20 நிமிடங்களில் சுவையான...

தினமும் அதே மாதிரியான மதிய உணவு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? 20 நிமிடங்களில் சுவையான கல்யாண விருந்து பாணியில் வெஜ் பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கல்யாண விருந்து சுவை தரும் 20 நிமிட வெஜ் பிரியாணி- தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1/2 கிலோ (15 நிமிடம் நீரில் ஊற வைத்தது)

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

அன்னாசிப்பூ - 2

ஏலக்காய் - 2 

பிரியாணி இலை - 2 

வெங்காயம் - 2 (நறுக்கியது) 

தக்காளி - 2 (நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - சிறிது

பீன்ஸ் - 5-6 (நறுக்கியது)

கேரட் -1 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

கெட்டி தயிர் - 2 மேசைக்கரண்டி 

கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு 

புதினா - 1/2 கைப்பிடி அளவு

மீல் மேக்கர் - 1 கப் (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)

பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலா - 1 தே.கரண்டி

சுடுநீர் - 5 கப்

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் வரையில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  நறுக்கிய வெங்காயத்தையயயும் சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தக்காளி  மென்மையாக மாறும் வரையில் நன்றாக வதக்க வேண்டும். 

இறுதியில்  பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலாவை போட்டு நன்றாக கலந்துவிட்டு 5 கப் அளவுக்கு வெந்நீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு,ஊற வைத்துள்ள பாசுமதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும். 

பின்னர் குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கினால் கல்யாண வீட்டு பாணியில் அட்டகாசமான சுவையில் காய்கறி பிரியாணி தயார். 

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்