காதலரை கரம்பிடிக்கவுள்ள தமன்னா - கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் திருமணம்!

காதலரை கரம்பிடிக்கவுள்ள தமன்னா - கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் திருமணம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சினிமாவில் பொலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் கிசுகிசுக்கப்பட்ட தமன்னா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அ...

சினிமாவில் பொலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் கிசுகிசுக்கப்பட்ட தமன்னா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார். அதிலும் பிரமாண்டத் திரைப்படமாக எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதேவேளை, 33 வயதான தமன்னா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தவர் தற்போது பொலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பல கிசுகிசு தகவல்கள் வெளியாகி இருந்தது. காதலரை கரம்பிடிக்கவுள்ள தமன்னா வெளியான அனைத்து கிசுகிசுக்களுக்கும் முடிவுகட்டும் நோக்கில் தங்களின் காதலை இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டார். அதற்குப் பின் இருவரும் எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இது ரசிகர்களின் கேள்வி மாத்திரமல்லாது தமன்னாவின் வருங்கால மாமியாரின் கேள்வியும் இதுவாகவே இருந்ததால் அவரின் ஆசையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்து வருகிறார். எனவே இவர்களின் திருமணம் குறித்து விரைவில் நல்லமுடிவுகளும் அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்