காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசிஇருந்தார். அப்போது அவர் காரில்...

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசிஇருந்தார்.

அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்தார் .

இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரிஷி சுனக்குக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளார்கள். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இவ் விடயம் தொடர்பாக பொலிஸார் டுவிட்டரில் கூறும்போது, ஓடும் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்