காலமானார் விஜயகாந்த்... கண்ணீர் கடலில் தமிழகம்!

காலமானார் விஜயகாந்த்... கண்ணீர் கடலில் தமிழகம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 344 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்