சர்வதேச மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உ...

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன், அருணன் A1 பிரிவில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி 2ஆம் இடத்தை பெற்றார்.

மேலும், இந்த மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாம்பூரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிக்கு செல்லத் தெரிவானார். நேற்று(2023.12.03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளிலிருந்து பலர் போட்டியில் பங்கு பற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இக்குறித்த மாணவன் தான் மலேசியா செல்வதற்கு உதவி செய்யுமாறு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் யாகேந்திரனிடம் நேரில் சென்று கோரியிருந்தார். இந்த நிலையில் பயணச் செலவுகள் முழுவதையும் தான் வழங்குவதாகக் கூறி பெற்றோர்களை அழைத்து பயணச் செலவுகளுக்கான பயணத்தொகையை அண்மையில் வழங்கியமை குறிப்பிட்டத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்