சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் உலகநாயகன் படம்!

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் உலகநாயகன் படம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இந்த...

2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

aalavanthan

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினியின் 'பாபா' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்