செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜீன் மாதம் செந்தில்...

நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜீன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 13ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது, 7வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது, இதனையடுத்து உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்