பாணின் விலை தொடர்பில் மேலும் மகிழ்ச்சியான செய்தி!

பாணின் விலை தொடர்பில் மேலும் மகிழ்ச்சியான செய்தி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்காலத்தில், அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால், பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன க...

எதிர்காலத்தில், அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால், பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.

அத்துடன், சரியான எடை இல்லாத பாணினை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், பாணின் எடை மற்றும் தரம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவத்துள்ளார். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே தயாராகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்