பெங்களூரு விமான நிலையத்தில் மாணவிக்கு நடந்த கொடூரம்

பெங்களூரு விமான நிலையத்தில் மாணவிக்கு நடந்த கொடூரம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கர்நாடகா - பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு செய்துள்ளனர். கிரிஷானி காத்வி என்ற பெண் பய...

கர்நாடகா - பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு செய்துள்ளனர்.

கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, என்னுடைய சட்டையை கழற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டது. ஓர் உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு, பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றது உண்மையில் அவமதிப்புக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது. ஒரு பெண்ணாக பலரது கவனம் ஈர்க்கும் வகையில் நிற்பது என்பது ஒருபோதும் விரும்பத்தகாத ஒன்று. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தகவல் பரவியதும், பெங்களூரு விமான நிலையம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்