மகன் சஞ்சய் எண்ட்ரிக்கு விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!

மகன் சஞ்சய் எண்ட்ரிக்கு விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நடிகர் விஜய்யின் பிரேக்கில் தன்னுடைய மகன் சஞ்சயை சினிமாவிற்குள் இறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்ப...

நடிகர் விஜய்யின் பிரேக்கில் தன்னுடைய மகன் சஞ்சயை சினிமாவிற்குள் இறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஸ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது. இதனை அடுத்து விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68வது திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இப்படியொரு நிலையில் நடிகர் விஜய் சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியலுக்கு செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதரவு தரும் வகையில் விஜய் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், விஜய் தமிழ் சினிமாவில் இல்லாத நேரத்தில் அவருடைய அன்பு மகன் சஞ்சயை அப்பாவின் ரசிகர்களை வைத்து கோலிவுட்டிற்குள் இறங்கவுள்ளார். தளபதி 68 படத்தின் ரிலீசை வைத்து மற்ற தகவல்கள் அனைத்தும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட தன் தந்தை எஸ்.ஏ.சி வழியில் மகன் ஜேசனை ஒரு பெரிய இயக்குனராக்கி விட வேண்டும் என்ற திட்டத்திலே விஜய் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்