முல்லைத்தீவு பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!

முல்லைத்தீவு பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தமிழர் பகுதியான மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

தமிழர் பகுதியான மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று மதியம் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். இந்நிலையில் அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு Surprise gift delivery செய்ய வேண்டுமெனக்கூறியுள்ளார்.

இந்நிலையில், சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி உரிந்ததையடுத்து அவர் தப்பியோடி வீதியால் வந்த இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இதனபோது சந்தேக நபரிடம் இருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரை விசாரித்ததில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொல்ல வந்ததாக கூறியதாகவும், அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்