மேலும் 05 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

மேலும் 05 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கிளிநொச்சி, நாச்சிக்குடாப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்...

இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கிளிநொச்சி, நாச்சிக்குடாப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமி ஒருவர் உட்பட்ட ஐவர் இன்று அதிகாலை இராமேஸ்வரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையைச் சென்றடைந்துள்ளனர்.

அவர்களை மரைன் போலீசார், மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்