யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வடமராட்சி...

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் துன்னாலை தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19 வயதுடைய ராஜ்பால ரஜீவன் ஆகிய இருவரே படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு இளைஞர்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்