வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய திட்டம் - வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய திட்டம் - வெளியான தகவல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நளீன் பெர்னாணடோ தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு...

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நளீன் பெர்னாணடோ தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அதன்படி இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம் என்றும் கடந்த 15 – 20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

அத்துடன் வாகனங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. எனவே, புதிய கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் நளீன் பெர்னாணடோ குறிப்பிட்டார்.

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாணடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாகன இறக்குமதி தொடர்ந்தும் நடைபெறும் என்றும் வாகனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை வாகனங்கள் தேவை என்பவற்றை தீர்மானிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்