வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் விசேட சித்தி

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் விசேட சித்தி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நேற்று அதிகாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்...

நேற்று அதிகாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர். ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்