உலகச் செய்திகள்
கொவிட் -19 சாதாரண சளிக்காய்ச்சல் பட்டியலில் சேர்க்கும் ஜப்பான்
கொவிட்–19 நோய்ப் பரவலின் தரம்பிரிப்பில், அதன் கடுமையை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டுவர ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் சாதாரண சளிக்காய்ச்சல் போலவே அதை வகைப்படுத்த நினைப்பதாக அரசாங்கத்தின் நிக்கேய் செய்தி நிறுவனம் கூறியது.
புதிய வகைப்படுத்தும் முறை கொவிட்–19 நோய்ப் பரவலை நாடு எப்படி எதிர்கொள்கிறது என்பதைத் தீர்மானிக்கும். இதனால் தனிமை உத்தரவு உள்ளிட்ட பல அம்சங்களில் பெரிய மாற்றம் வரலாம்.
உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிவதும் கைவிடப்பட்டு, தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகலாம். ஜப்பானில் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை கொவிட்–19 நோய்க்கு ஆளாகும் நிலையில் புதிய மாற்றம் குறித்த பேச்சு நடைபெற்று வருகிறது.
பிரதமர் புமியோ கிஷிடா இது தொடர்பில் இன்று (20) அமைச்சர்களைச் சந்திக்கவுள்ளார்.