உலகச் செய்திகள்

மீண்டும் ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்

இன்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கமானது 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் நேற்று முன்தினம் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Back to top button