கின்னஸில் இடம்பிடித்த எலான் மஸ்க் – என்ன சாதனை தெரியுமா?
எலோன் மஸ்க் உலகின் முதல்தர பணக்காரராக இருந்து சொத்துக்களை பெருமளவில் இழந்து இப்போ ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
இப்போது கின்னஸில் இடம்பிடித்துள்ள எலோன் மஸ்க் வரலாற்றில் மிக அதிக அளவில் தனிப்பட்ட செல்வத்தை இழந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.
நவம்பர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை அவர் சுமார் 165 பில்லியன் டாலர்களை இழந்ததாக என்று கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இதனைவிட உண்மையான மஸ்கின் இழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கின்னஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்கிய மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிய ஆரம்பித்தது.
நவம்பர் 2021 முதல் திரு மஸ்க்கின் சொத்து இழப்புகள் 2000 ஆம் ஆண்டில் அதிகமாக சொத்துக்களை இழந்து சாதனைபடைத்த ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன்னின் சாதனையை முறியடித்துள்ளது.
ஆனால் மதிப்பிடப்பட்ட இழப்பு அவரது பங்குகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் எனவே மீண்டும் அவை அதன் மதிப்பை பெறலாம், அதாவது திமஸ்கின் செல்வம் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.