உலகச் செய்திகள்ஜெர்மனி
ஜெர்மனியில் எரிவாயு விலை குறைந்தது

ஜெர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் எரிவாயுவின் மொத்த விலை போருக்கு முந்தைய விலையை விட குறைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி அன்று, நெதர்லாந்தின் எரிவாயு வர்த்தக தளம் எரிவாயு விலை மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கமைய, ஐரோப்பாவில் ஒரு மெகாவாட் மணிநேரத்திற்கு 72,75 யூரோக்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில், ஜெர்மனி தனது குளிர்கால எரிவாயு இருப்புக்களை 100 சதவீதத்திற்கு நிரப்பியது, எனினும் விலை அதிகரிப்பு காரணமாக வீடுகளும் வணிகங்களும் நுகர்வு குறைக்க வேண்டியிருந்தது. தற்போது குளிர்காலத்தின் பாதியில், ஜெர்மனியின் எரிவாயு இருப்பு 90 சதவீதம் நிரம்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.