இரண்டாவது ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு!
இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவம் பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார்.
இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார்.
ஆதியோகி திருவுருவம் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி, சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும், ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்தியாவின் முதல் மிகப்பெரிய ஆதியோகி சிலை தமிழ்நாடு கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்துள்ளது.
இச்சிலை 112 அடி உயரம் கொண்டது. இது 500 டன்கள் கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது.
இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அதன் உத்தியோகபூர்வ ‘இன்கிரிடிபிள் இந்தியா’ என்ற பகுதியில் ஒரு புனிதத் தலமாக இச்சிலையை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.