இஸ்ரேலில் வலதுசாரிக்கு எதிரான மிகப்பெரும் ஆர்ப்பாட்டம்.
இஸ்ரேலில் உருவாகியுள்ள மிகத் தீவிர வலதுசாரி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.ஆர்ப்பாட்டகாரர்கள் துறைமுக நகரான டெல் அவிவில் கடந்த07.01.2023 கூடி ‘ஜனநாயகத்திற்கு ஆபத்து’ மற்றும் ‘பாசிச, பாகுபாட்டு அரசுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற வாசகங்களை ஏந்தி போராடினர் .
தீவிர வலதுசாரிகள் மற்றும் பழைமைவாத யூதக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே நெதன்யாகு கடந்த மாதம் ஆட்சி அமைத்தார். இவர்களில் சிலர் தற்போது முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்களை அதிகரிப்பது மற்றும் ஒருபாலுறவினர் அச்சமடையும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி புதிய அரசு அறிவித்துள்ளது.இடதுசாரிகள் மற்றும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உள்ள பலஸ்தீன உறுப்பினர்கள் தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .