ரகசிய ஆவணத்துடன் சிக்கிய பைடன்
மிக இரகசியமான ஆவணங்கள் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதித் திணைக்களம் அது பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது வொசிங்டன் டி.சியில் இருக்கும் அவரது முன்னாள் அலுவலகத்திலேயே இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மூடப்பட்ட அலுமாரி ஒன்றில் இருந்து சுமார் 10 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதி தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பைடனின் முன்னவராக இருந்த ஜனாதிபதி டொல்ட் டிரம்பும் தனது பதவிக் காலத்தில் இரகசிய ஆவணங்களை புளோரிடாவுக்கு எடுத்துச் சென்றது பற்றி குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது தொடர்பில் விசாரிக்க சுதந்திர சட்டத்தரணி ஒருவரை நீதித் திணைக்களம் நியமித்த விரைவிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.