இந்தியா
மோடியின் சொகுசு கப்பல் தரை தட்டியது

மோடியின் விலாஸ் சொகுசு கப்பல் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது.
கடந்த மாதம் 13 ஆம் திகதி உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார்.36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும்.