அமெரிக்காஉலகச் செய்திகள்

மீண்டும் அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

அமெரிக்காவின் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் ம தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முககவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. டிசம்பர் 17 தொடக்கம் 23ம் வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் பதிவுகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும். இந்நிலையிலேயே நியூயார்க் கலிபோர்னியாஇ மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button