உலகச் செய்திகள்அமெரிக்கா

2022 பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்க அழகி பெற்றார்.

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்.போனி கேப்ரியல் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.

Back to top button