உலகச் செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் – கசிந்த தகவல்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவிவிலகுவதாக அறிவித்துள்ள நிலையில்,

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தீவிரமடைந்த தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்திடமிருந்தே நியூசிலாந்து பிரதமர் கடும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் 2022 இல் பிரதமருக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் மூன்று மடங்காக அதிகரித்தன என நியூசிலாந்தின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரை படுகொலை செய்யப்போவதாக எச்சரித்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ஜெசிந்தா ஆர்டெனின் காரை துரத்தி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பார்த்து நாஜி என சத்தமிட்டுள்ளனர் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாராளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஜெசின்டாவை கொலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களின் காலத்தில் ஜெசிந்தா வெறுப்பையும் கொடுமையையும் எதிர்கொண்டார் இது முன்னர் ஒருபோதும் நம்நாட்டில் இடம்பெறாதது என முன்னாள் பிரதமர் ஹெலென் கிளார்க் தெரிவித்துள்ளார்.

Back to top button