மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்: உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/12/23-6582ad317e0e6.jpg)
இந்தியாவிால் கண்டறியப்பட்டுள்ள கோவிட் வைரஸின் புதிய திரிபு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட JN1 என்ற புதிய திரிபு தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது JN1 வைரஸ் பரவி வருவதால், கேரள மாநிலம் மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதேவேளை, JN1 என்பது கோவிட் 19 ஒமிக்ரோன் வைரஸின் BA2.86 துணை வகையை மாற்றுவதன் மூலம் உருவாக்கப்பட்ட மிக வேகமாக பரவும் வைரஸ் வகையாகும்.குறித்த வைரஸ் திரிபால் பயப்படுவது அவசியமற்றது என தெரிவிக்கப்படுகிறது. என்ற போதும் அந்த வைரஸின் தாக்கம் தொடர்பில் மிக அவதானமாக இருப்பதுடன் முகக்கவசம் அணிவது, சுகாதாரப் பழக்கங்களைப் பேணுவதன் மூலமும் இதனைத் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.