இந்தியா

பொங்கல் கொண்டாட்டம் : கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் 5 டன் கரும்பு !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் கரும்பு மற்றும் இதர பொங்கல் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

கரும்புடன், மஞ்சள், வெல்லமும் அனுப்பப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா விமானத்தில் கரும்பு கொண்டு செல்ல புக்கிங் செய்யப்பட்டது. கடந்த 8 திகதி முதல் கரும்பு அனுப்பப்பட்டது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது.

5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது,

Back to top button