இந்தியா
ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு

இந்தியவின் கேரளபெண் சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.
இதையடுத்து சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்தியதாக ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பத்தினம் திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகின்றனர் .
பாத்திமா பழமை வாத இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் இப்போது சூர்யா காயத்திரி என்று வாழ்ந்து வருவதும் தெரிந்ததே.
இவர் சபரிமலை சர் ச்சையில் பேசப்பட்டு வந்தார் 2018 இல் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற சட்டம் கொண்டு வந்த போது முதலில் நுழைந்த மாதவிடாய் வயது பெண்களில்இவரும் ஒருவராவார். .