ஆசியாஉலகச் செய்திகள்
சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியர்களுக்கு சிறைதண்டனை
பௌத்த மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியர்களுக்கு அந்நாட்டு குடிரிமை மறுக்கப்பட்டுவருவதுடன் அம்மக்கள் சட்டவிரோத குடியேறிகளாகப் பார்க்கப்படுகின்றனர்.
இவை இப்படி இருக்க அங்கே வாழும் மக்களை மியன்மார் அரசு அடிமைகளால் நடத்துவது பல முறை உலகளவில் பேசப்பட்டு வந்தது. எனவே ரோஹிங்கியர்கள் பலமுறை படகு மூலம் கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறும் ,முயற்சி செய்து வருகின்றனர்.
அவ்வாறு வெளியேற முயன்ற சிறுகுழு சிக்கி தண்டனையை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 12 சிறுவர்கள் உட்பட 112 பெரியவர்களும் அடங்குகின்றனர் சிறுவர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் பெரியவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.