சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாடு சட்டசபையில் ஏகமானதாக நிறைவேறியது!
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/01/SETHU.jpg)
தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர் முன்மொழிந்த அந்த தீர்மானத்தில், ” சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த விடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுவதாக” குறிப்பிட்டிருந்தார்.
சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேது சமுத்திர திட்டம் என்பது பாக் ஜலசந்தியும் மன்னார் வளைகுடாவும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இந்த திட்டத்தினால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பல மடங்கு உயரும் என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக நிலவிவருகிறது.
மேலும் , சேது சமுத்திரக் கால்வாய் இந்திய இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால் எல்லை தெரியாமல் மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும் நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சேது சமுத்திரத் திட்டம் என்றால் என்ன?
Sethusamudram Shipping Canal Project (சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்) என்பது (ஆதாம் பாலம், Adam’s Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே திட்டம்.
சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் அளவு என்ன?
- 300 மீ அகலமும்
- 12 மீ ஆழமும்
- 167 கி.மீ நீளமும்
தமிழ் விக்கி பீடியா இணைய தளத்தில் மேலதிகமான பல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.