Tag: Jaffna
-

யாழ். நீர்வேலியில் ஆசிரியர்களின் வீட்டில் கொள்ளை
யாழ்ப்பாணம் நீர்வேலி வீதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் இன்று (09.01.2024) அதிகாலை நடைபெற்றுள்ளது. கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த தங்கச் சங்கிலிகள், பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து நீர்வேலி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, இனம் தெரியாத கும்பல் வீட்டினுள் புகுந்தது.…
-

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விடுதலை புலிகள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று, 2023 நவம்பர் 26ம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள். தமிழர் தாயகம் எங்கும் அவரது பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பிரத்தியேக இடத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், பிரபாகரனின் உருவப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள்,…
-

நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதியாக மாதுரி நிரோசன் தேர்வு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் மாதுரி நிரோசன், இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளம் வயதில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். இவர் தற்போது 30 வயது நிரம்பியுள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாதுரி நிரோசன், 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவத்தைத் திரட்டி, தற்போது நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். மாதுரி நிரோசன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். இவருக்குச் சட்டம் படிக்க உதவிய பெற்றோர்,…
-

புலமைப்பரிசில் பரீட்சை- தேசிய அளவில் முதல் இடம் பிடித்த யாழ் வலயம்!
அண்மையில் வெளியான தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை 3இலட்சத்து 29 ஆயிரத்து 668 ஆகும்.இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 257 ஆகும். வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17 ஆயிரத்து 622…
-

நக்குண்டார் நாவிழந்தார் : அரசியல்வாதிகளுக்கு துணைவேந்தர் அறிவுரை!
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் தாயாக அரசியல் களமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் , நாடாளுமன்றில் எதிர்த்து உரத்துப்பேசும் நம்மவர்கள் – பின்னர் இரவில் தாம் எதிர்த்தவர்களுடனேயே விருந்துகளில் பங்கேற்று குடிக்கிறார்கள் – இவர்கள் நக்கினார் நாவிழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சிறீசற்குணராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நேற்று வலிகாமம் தெற்கு…
-

முதன் முறையாக யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன் தவவையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமிக்கு அவரது தாயார் வழங்கிய சிறுநீரகம் பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை நிபுணர் தம்பிலி தவசேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறுநீரகங்கள் இயல்பான செயல்பாட்டின்…
-

இலங்கை ஜனாதிபதி எதிர்ப்பு போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து இடம்பெற்ற இப் போராட்டதில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றபோது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.
-

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – 49வது ஆண்டு நினைவேந்தல்!
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில்அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இன்று நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பொதுமக்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.…
-

யாழ்பாணத்திற்கான புகையிரத சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது!
வட பகுதிக்கான புகையிரத பாதைகளின் நவீனமயமாக்கல் மற்றும் திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வரை செல்லும் புகையிரதங்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.