உலகச் செய்திகள்ஆசியா
ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது சவுதி அரேபியா அரசு!
கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளால் சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இது தொடர்பாக சவுதி அரேபிய அமைச்சர் தவுபிக் அல் ரபியா கருத்து தெரிவிக்கும்போது இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டுப்பாடுகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது என்றும் வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு குறைந்துவரும் காரணத்தால் ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.