பிரான்ஸ்உலகச் செய்திகள்
புதுவருட கொண்டாட்டத்தில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

பிரான்சில் புதுவருடத்தை கொண்டாடுவதற்காக பட்டாசு வெடித்த இளைஞனது விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கேன் (கால்வாடோஸ்) நகரில் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
20 வயதுடைய இளைஞன் மோட்டார் பட்டாசினை வெடிக்கவைக்க முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக பட்டாசு கைகளில் இருக்கும் போதே வெடித்துள்ளது. இதனால் அவர் படுகாயமடைந்தார். நான்கு கைவிரல்கள் துண்டாக்கப்பட்டது. உள்ளங்கைகளும் எரிந்துள்ளன. உடனடியாக அந்த இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நள்ளிரவு 1 மணி அளவில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.