உலகச் செய்திகள்

ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டா மீதான தடை நீக்கம் – ஏற்கனவே சொன்னதுதான்!

இரண்டு வருடங்களுக்கு பின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருக்கு வித்திக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம். குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்என்று தெரிவித்துள்ளார்.

ஏன் டொனால்ட் ட்ரம்பின் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டது?

டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடெனிடம் தோல்வி அடைந்தார்.

தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த ட்ரம்ப், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டார்.

ட்ரம்பின் பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் டொனால்ட் ட்ரம்பின் கணக்குகளை முடக்கின.

அப்போது ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது ஆனால் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

அதேபோல் டொனாலட் ட்ரம்பின் பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது 2021 ஜனவரி 7 ஆம் திகதி இத்தடை அமுலுக்கு வருவதாக அறிவித்ததோடு 2023 ஜனவரி வரை இத்தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது அதன்படி தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ள்ளன.

Back to top button