உலகச் செய்திகள்

திருமணத்துக்கு முன் மொட்டை அடிக்கும் பெண்கள்; ஆபிரிக்க பழங்குடியினர் பின்பற்றும் விசித்திர சடங்கு!

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து மதங்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினங்களின் சடங்குகளிலும் பல்வேறு முறைகள் இருக்கும் , அதன்மீது அவரவர்களுக்குப் பல நம்பிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், ஆபிரிக்க பழங்குடியினரால் பின்பற்றப்படும் திருமணச் சடங்கு ஒன்று பலரையம் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இந்த ஆபிரிக்கப் பழங்குடியினரில் பெண்கள் திருமணத்துக்கு முன் மொட்டையடிக்கவேண்டும் என்ற ஒரு சடங்குமுறை காணப்படுகிறது. பாரம்பரியமிக்கதாகக் கூறப்படும் இத்தகைய திருமணச் சடங்கு, கென்யாவின் போரானா எனப்படுகின்ற பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது.

இங்கு மணப்பெண் திருமணத்தின்போது மொட்டையடித்துக்கொள்வதால், மணமகனுக்கு மிக அடர்த்தியான நீண்ட முடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் ஆண்கள், தங்களுக்கு அடர்த்தியான முடி வளர, நெய் அல்லது வெண்ணெய் தடவி தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்க்களாம்.

மேலும், எத்தியோப்பியா, சோமாலியாவில் வாழ்கின்ற பழங்குடியினரில் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியில்லையாம் . இதற்கும் அவர்கள், புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பெண்கள் ரத்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.

இவ்வாறு உலகின் பல இடங்களில் விசித்திரமான சடங்கு முறைகள் இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யாமானதும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமாகவும் காணப்படுகிறது.

Back to top button