திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
தொடரும் நெருக்கடிகளால் அடுத்த 03 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது அந்த நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“திவால்” ஆகும் நிலை என்றால் என்ன?
திவால் என்பது ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் அல்லது ஒரு நாடு , தான் வாங்கிய கடன் மற்றும் தான் செலுத்த வேண்டிய தொகைகளை, திரும்ப செலுத்த பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் போது, அந்த நிறுவனம் திவால் என்ற ஒரு நிலையை எட்டும். அதாவது அதற்கு மேல் அந்த நிறுவனத்தால் இயங்க முடியாது என்று பொருளப்படும்.
இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எட்டவுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.