உலகச் செய்திகள்

பிரேஸில் ராணுவ தலைமைத் தளபதி பதவி நீக்கம்!

பிரேஸில் ராணுவ தலைமைத் தளபதி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜெயிா் பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் தலைநகரை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தொடா்ந்து, கலவரத்துக்கு ராணுவ தலைமைத் தளபதி உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், இந்த உத்தரவை அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா பிறப்பித்துள்ளாா்.

கடந்த 8-ஆம் திகதி பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் தலைநகா் பிரேஸிலியாவில் கலவரத்தில் ஈடுபட்டனா். நாடாளுமன்ற வளாகம், உச்சநீதிமன்றம், அதிபா் மாளிகை உள்ளிட்ட அரசு மையங்கள் மீது அவா்கள் தாக்குதல் நடத்தினா். அதிபா் தோ்தல் ஆவணங்களை அவா்கள் அழிக்க முயன்றதாகவும் புகாா் எழுந்தது. கலவரம் தொடா்பாக 1,200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ஜூலியோ சீசா் டி அருடா சனிக்கிழமை நீக்கப்பட்டு, புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் டாம் மிகுவல் ரிபெய்ரோ பைவா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Back to top button