இந்தியா

”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல்

மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயரை தங்கள் கிராமத்தின் தெருவுக்குப் பெயராகச் அந்த கிராம மக்கள் சூட்டியுள்ளனர்.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரமுடியாத பல பிரபலங்களும் தேமுதிக அலுவலத்தில் அவரது நினைவிடத்திற்கு வந்து, நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜயாகாந்த் மறைவை ஒட்டி அவரது பெயரைச் சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு ”கேப்டன் விஜயகாந்த் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்துள்ளனர். கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button