பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயா வழக்கு தாக்கல் !
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி காதலித்து 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆராதயா என்ற மகள் உள்ளார்.
அவர்களுக்கு 2011ஆம் ஆண்டு ஆராதயா என்ற மகள் பிறந்தார். ஆராதயா குறித்து டெல்லியைச் சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆராதயாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வீடியோவிற்கு எதிராக ஆராதயா மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், தான் மைனர் என்பதால் இது போன்ற வீடியோக்களை வெளியிடத் தடை விதிக்கவேண்டும் என்றும், ஏற்கெனவே வெளியான வீடியோக்களை யூடியூப்பில் இருந்து அகற்ற உத்தரவிடவேண்டும் என்றும் ஆராதயா சார்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தையும் இவ்வழக்கில் ஆராதயா சேர்த்திருக்கிறார். அதேசமயம் இது குறித்து பச்சன் குடும்பத்தினர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அபிஷேக் பச்சன் இது போன்ற செய்திக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவர் அளித்துள்ள பேட்டியில், ஆராதயாவிற்கு எதிராக வரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது, பொருத்துக் கொள்ளவும் முடியாது. எதைச் சொல்வதாக இருந்தாலும் நேருக்கு நேர் வந்து சொல்லுங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆராதயா, தனது தாயார் ஐஸ்வர்யா ராயுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி ஏற்பாடு செய்திருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஆராதயாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவை அவர் படிக்கும் பள்ளியிலிருந்து வெளியானதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அபிஷேக் பச்சன், “வெளியில் வரும்போது புகைப்படம் எடுங்கள். அவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.