இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா சிம்பு? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்
இப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கு கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா என்ற கேள்வியுடன் தற்போது வைரலாகி வருகின்றது. நடிகர் சிம்பு சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்
இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர். அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மேலும், இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது. இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.
அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் வெளியாகியுள்ளது.
சிம்பு இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்பதைக் எடுத்துக்காட்டும் வகையில் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது.
தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் நோன்பை நோற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோன்பு இஸ்லாமியர்களால் விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காயிதே மில்லத் பேரவை சார்பாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இஸ்லாமிய மக்களுடன் அமர்ந்து புனித ரமலான் நோன்பு திறந்தார். சிம்புவின் தம்பி குறலரசனும் மதம்மாறியிருப்பது போல சிம்புவும் மாறிவிட்டார் என பல தகவல்கள் பரவி வருகின்றது.