சினிமா

உலகளாவிய வெற்றி.. வைரலாகும் ‘துணிவு’ பட போஸ்டர்!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் ‘துணிவு’ .இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டிருந்தது . துணிவு போஸ்டர் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலு, இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ள நிலையில் ‘துணிவு’ படக்குழு பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ‘உலகளாவிய மிகப்பெரும் வெற்றி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Back to top button