சினிமா

விஜய் இல்லாமல் குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலான சங்கீதா: பல உண்மைகளை வெளியிட்ட தோழி

விஜய்யால் அதிக மன உழைச்சலில் இருக்கும் சங்கீதா எல்லோரையும் புறக்கணித்து விட்டு லண்டனில் செட்டிலாகி விட்டதாக தோழி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

மேலும், தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது. முதன் முதலாக தந்தையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தையை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாகவும் பிறகு விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் சங்கீதா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் விஜய்யால் அதிக மன உளைச்சலடைந்த சங்கீதா குழந்தைகளோடு லண்டனில் வசித்து வருவதாகவும் அதனால் விஜய்யும் மன கஷ்டத்தில் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சங்கீதாவின் தோழிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தி ஒன்று கூறப்பட்டு வருகின்றது.

இது பற்றி எந்த உண்மைத் தன்மையும் இல்லாததால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்தவுடன் உண்மைகள் வெளியிடப்படும் எனவும் அந்த ஊடகம் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருக்கிறது.

Back to top button