சினிமா

கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்.ஆர்.ஆர் பட பாடல்

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மிகச் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜனி காந்தும் “எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.என்று வாழ்த்தியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button