சினிமா

கொட்டும் மழையில் விக்கியுடன் நயன்தாரா செய்த காரியம்! ரசிகர்களுக்கு காத்திருந்த இன்பஅதிர்ச்சி

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் மழையில் நனைந்து கொண்டு இரவில் ஏழைகளுக்கு உணவளித்த காணொளி ட்ரெண்டாகி வருகின்றது

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.

தற்போது நயன்தாராவின் காணொளி வைரலாகி வருகின்றது. மழை பெய்து கொண்டிருக்கும் இரவு நேரத்தில் குடைப்பிடித்தபடி இருவரும் ஏழைகளுக்கு உணவளித்து சென்றுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியின் மனிதாபிமான குணத்தை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Back to top button