சினிமா

நடிகர் விஜய்க்கு பொலிசாரால் விதிக்கப்பட்ட அபராதம்! வைரலாகும் பில்

நடிகர் விஜய்க்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ளனர். 10 மற்றும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் நடிகர் விஜய். விஜய்யின் இந்த செயல் பாராட்டுகளை அதிகம் பெற்றாலும் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். அரசியலில் களமிறங்குவதற்காக விஜய் காய் நகர்த்துகிறார் என கூறப்படுகிறது, இந்நிலையில் 234 தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளுடன் நேற்று விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பனையூர் இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றுள்ளார். இது சிசிடிவியில் பதிவாகவே, விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலிசார். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக 500 ரூபாய் அபராத தொகையை செலுத்தியுள்ளார், இதற்கான பில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் கார் கண்ணாடியில் போக்குவரத்து விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Back to top button